நீர் விநியோகமும் தடை! - Sri Lanka Muslim
Contributors

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மின் தடை காரணமாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளமையால், அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. எனினும், ஏனைய சில சுத்திகரிப்பு நிலையங்கள் மின் பிறப்பாக்கிகள் மூலம் செயற்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவி பொது முகாமையாளர் அநுருத்த பெரேரா தெரிவித்தார்.

களனி தெற்கு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், ஏற்கனவே களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நீர் ஒரு சில பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team