நெல்சன் மண்டேலா உலகை விட்டுப் பிரிந்தார்! கண்ணீரில் உலகம் (புகைப்படம்) - Sri Lanka Muslim

நெல்சன் மண்டேலா உலகை விட்டுப் பிரிந்தார்! கண்ணீரில் உலகம் (புகைப்படம்)

Contributors

nelson mandela1

 

nelson mandela2

 

nelson mandela3

 

nelson mandela5

 

nelson mandela6

மண்டேலா அமைதியாக இறந்தார் என்று தற்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா கூறியிருக்கிறார்.

மண்டேலா ஜோஹனஸ்பெர்க்கில் உள்ள அவரது இல்லத்தில் இறந்தார்.

அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது இல்லத்தில் அவர் இறக்கும் தருவாயில் இருந்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அவரது மகள் மகஸிவே மண்டேலா, நெல்சன் மண்டேலா அவரது மரணப்படுக்கையில் மிகவும் தைரியமான ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார்.
மண்டேலா மருத்துவமனையில் இருந்து செப்டம்பர் மாதம் வீடு திரும்பியதிலிருந்து ,அவரது இல்லத்திலேயே மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

நெல்சன் மண்டேலா…

1918: கிழக்கு கேப்பில் பிறந்தார்.

1943: ஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்.

1956: தேசத் துரோகக் குற்றச்சாட்டு அவருக்கு எதிராகப் பதியப்பட்டது, ஆனால் நான்காண்டு விசாரணைக்குப் பிறகு குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.

1962: கலவரத்தைத் தூண்டியமை, கடவுச்சீட்டு இன்றி நாட்டைவிட்டு வெளியேறியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டு, ஐந்தாண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார்.

1964: நாசவேலை குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.

1990: சிறையிலிருந்து விடுதலை.

1993: அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1994: தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1999: தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினார்.

2001: ப்ரொஸ்டேட் புற்று நோயால் பீடிக்கப்பட்டார்.

2004: பொது வாழ்விலிருந்து விலகினார்.

2005: தனது மகன் எச்.ஐ.வி. எய்ட்ஸ் நோய் தொடர்பான உடல்நலக்குறைவால் இறந்ததாக அறிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team