
நைஜீரியாவில் கடத்தப்பட்ட சுமார் 300 மாணவிகள் விடுவிப்பு!!
வடமேற்கு நைஜீரிய மாநிலமான ஜம்பாராவில் உள்ள ஒரு உறைவிடப் பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட சுமார் 300 சிறுமிகளை கடத்தல் காரர்கள் பாதுகாப்பாக விடுவித்துள்ளதாக மாநில ஆளுநர் உறுதிபடுத்தியுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி ஜம்பாரா ஆளுநர் பெல்லோ மாதவல்லே, மாணவர்கள் அதிகாரிகளுடன் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எவ்வித பணமும் செலுத்தப்படவில்லை என்று செவ்வாயன்று தெரிவித்துள்ளார்.
மேலும் மீட்கப்பட்ட மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
ஜம்பரா மாநிலத்தின் தொலைதூர ஜங்கேபே கிராமத்தில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலை படாசாலையில் 100 க்கும் மேற்பட்ட துப்பாக்கிதாரிகள் நடத்திய சோதனையில் 317 சிறுமிகள் கடந்த வெள்ளிக்கிழமை கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனால் கடத்தப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 279 என்று மாதவல்லே அல் ஜசீராவிடம் கூறியுள்ளார்.
வடமேற்கு மற்றும் மத்திய நைஜீரியாவில் கடுமையாக ஆயுத மேந்திய குற்றவியல் கும்பல்கள் சமீபத்திய ஆண்டுகளில் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளன.
நைஜீரிய இராணுவம் 2016 ஆம் ஆண்டில் இப்பகுதிக்கு அனுப்பப்பட்டது மற்றும் கொள்ளைக்காரர்களுடன் சமாதான ஒப்பந்தம் 2019 இல் கையெழுத்திட்டனது. ஆனால் தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறுகின்றன.