பங்களாதேஷ், நியூசிலாந்து ஒருநாள் தொடர் ஆரம்பம் - Sri Lanka Muslim

பங்களாதேஷ், நியூசிலாந்து ஒருநாள் தொடர் ஆரம்பம்

Contributors

பங்களாதேஷிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், பங்களாதேஷ் அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் இன்று ஆரம்பிக்கவுள்ளது.

முதலாவது போட்டி ஷேரே பங்களா கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளதோடு, இப்போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 0-0 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்த நிலையில் இத்தொடர் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் நியூசிலாந்து அணி பங்களாதேஷிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை 0-4 என்ற கணக்கில் தோல்வியடைந்திருந்த நிலையில், அதற்கான பழிவாங்கும் தொடராக இத்தொடர் அமையவுள்ளது.
நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டமும், வேகப்பந்து வீச்சும் பலமானவையாகக் காணப்படகின்றன. பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து பலவீனமானதாகக் காணப்படுகிறது. ஆனால் பங்களாதேஷ் அணியின் சுழற்பந்து வீச்சு அவ்வணிக்கு அதிகமான வாய்ப்புக்களை வழங்குகின்றது.
எதிர்பார்க்கப்படும் அணிகள்:
பங்களாதேஷ்: தமிம் இக்பால், அனாமுல் ஹக், மொமினுல் ஹக், முஷ்பிக்கூர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், நசீர் ஹொசைன், மகமதுல்லா, சொஹக் கஸி, அப்துர் ரஸாக், மஷ்ரபி மோர்தஷா, றூபெல் ஹொசைன்
நியூசிலாந்து: அன்ரன் டேவ்சிச், ஹேமிஷ் றதர்ஃபோர்ட், கேன் வில்லியம்சன், றொஸ் ரெய்லர், பிரென்டன் மக்கலம், கொரே அன்டர்சன், கிரான்ட் எலியட், நேதன் மக்கலம், ரிம் சௌதி, கைல் மில்ஸ், மிற்சல் மக்லநகன்

Web Design by Srilanka Muslims Web Team