பசிலின் பதவியேற்பை புறக்கணித்த மூவர்..! - Sri Lanka Muslim
Contributors
author image

Editorial Team

முன்னதாக நிதியமைச்சராக பதவியேற்ற நிலையில் பின்னர் நாடாளுமன்றம் வருகை தந்தபஸில் ராஜபக்ச சபாநாயகர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்தார்.

இந்த நிகழ்வை ஆளும்கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பகிஸ்கரித்துள்ளமை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ ஆகியோர் சபையில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அமைச்சர் உதய கம்மன்பில சபா மண்டபத்தில் இருந்துள்ளார். இதேவேளை குறித்த அமைச்சர்களும் உறுப்பினரும் 20ஆவது திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team