பச்சையாக கறிவேப்பிலை சாப்பிடுவதால் கொலஸ்றோலின் அளவினை கட்டுப்படுத்தலாம். இருதய சத்திர சிகிச்சை நிபுணர் இலாஹி. » Sri Lanka Muslim

பச்சையாக கறிவேப்பிலை சாப்பிடுவதால் கொலஸ்றோலின் அளவினை கட்டுப்படுத்தலாம். இருதய சத்திர சிகிச்சை நிபுணர் இலாஹி.

31120643_1693196017437392_3181291682125578240_n

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

(video)

கறிவேப்பிலையினை அதிகமாக நாளந்தம் தங்களுடைய உணவில் பச்சையாக சாப்பிடுகின்ற பொழுது இரத்தத்தில் அதிகரிக்கின்ற கொலஸ்றோலின் அளவினை கட்டுப்படுத்த முடியும் என்ற முடிவானது விஞ்ஞான ரீதியாக இன்னும் நிரூபிக்கப்படா விட்டாலும் தான் நம்பிக்கை கொள்வதாகவும், தன்னிடம் வருகின்ற இருதய நோயாளிகள் மற்றும் இரத்தத்தில் கொலஸ்றோலின் அளவானது அதிகம் உள்ளவர்களில் இரத்தத்தில் உள்ள கொலஸ்றோல் அறிக்கையினை பார்க்குமிடத்தில் கொலஸ்றோலின் அளவானது அதிகளவில் குறைந்துள்ளதனை பார்க்ககூடியதாக உள்ளது.

அதற்கு முக்கிய காரணமாக குறித்த அந்த நோயாளிகள் அதிகமாக பச்சையாக கறிவேப்பிலை மற்றும் வெள்ளைப்பூண்டு சாப்பிட்டமையாகும். ஆகையால் என்னை சந்திக்க வருகின்ற குறிப்பிட்ட நோய்களை உடைய நோயாளர்களுக்கு அதிகளவில் கறிவேப்பிலை உண்ணுமாறு ஆலோசனை வழங்குவதும் உண்டு.

என்னை பொறுத்தமட்டில் கறிவேப்பிலை எனும் அந்த தாவர இலையில் கொழுப்பில் உள்ள கொலஸ்றோலின் அளவினை கட்டுப்படுத்த கூடிய இரசாயண பதார்த்தங்கள் இருக்ககூடும் என்ற வகையிலேதான் கறிவேப்பிலை சாப்பிடும் நோயாளிகளின் இரத்த பரிசோதனை அறிக்கையினை பார்க்கின்ற பொழுது சாதகமான விடை கிடைக்கின்றது என பிரபல இருதய சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் இலாஹி மேற்கண்டவாறு அவருடனான நேர்காணலின் பொழுது தெரிவித்தார்.

மேலும், தனது கருத்தினை தெளிவுபடுத்திய இருதய சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் இலாஹி, இருதய நோயானது (Heart Attack) எனும் நோயானது மூன்று வழிகளில் மணிதனுக்கு ஏற்படுகின்றது முதலாவதாக இருதயத்தில் உள்ள இரத்த நரம்புகளில் இரத்த ஓட்டம் தடைப்படுவதினால் வருவதாகும் இதனை ஆங்கிலத்தில் (Coronary Heart Hisease அல்லது Hypertensive Heart Disease அழைக்கப்படும்) இதற்குத்தான் அதிகமாக இருதய சத்திர சிகிச்சை (பைபாஸ் bypass surgery) மேற்கொள்வது எனக் கூறப்படும்.

இரண்டாவதாக பிறப்பிலேயே இளம் வயதினருக்கு வருகின்ற இருதய நோயாகும். அதாவது இருதயத்தில் சிறிய துவாரம் ஏற்படுதலாகும். இதனை நாங்கள் (Congenital heart Disease) மூன்றாவதாக இருதயத்திலிருந்து இரத்தத்தினை கடத்துவதற்காக சம்மந்தப்பட்டுள்ள நான்கு இரத்த குழாய்களிலும் ஏற்படுகின்ற நோயாகும் இதனை நாங்கள் (Rheumatic Heart Disease அல்லது Valvular Heart Disease) இவைகள்தான் இருதயத்துடன் சம்பந்தப்பட்டு வரக்கூடிய பொதுவாக வரக்கூடிய நோய்களாகும்.

இதனையும் தாண்டி இருதய புற்று நோய்களும் இருக்கின்றன என தெரிவித்தார் இருதய சத்திர சிக்கிச்சை நிபுணர் டொக்டர் இலாஹி.

தொடர்ந்து இருதய நோய்கள், மற்றும் சத்திர சிகிச்சை சம்பந்தமாக டொக்டர் இலாஹியிடம் கேற்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களின் நேரடி காணொளியானது எமது இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka