படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 13 ஆவது நினைவு தினம் இன்று! - Sri Lanka Muslim

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 13 ஆவது நினைவு தினம் இன்று!

Contributors

படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவின் 13வது ஆண்டு நினைவு தினம் இன்று (08) அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை நடத்தியது.

மட்டக்களப்பு நகரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து மட்டு.ஊடக அமையத்தில் சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் திருவுருவப்படத்திற்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணாக்கியன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் எஸ். சிவயோகநாதன், மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொது அமைப்புகளின் பிரமுகர்கள், மதத்தலைவர்களுக்கு அழைக்கு விடுக்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் வாழ்கை வரலாறு அடங்கிய கோர்ப்புக்களை சிரேஸ்ட ஊடகவியலாளரும், இயக்குனருமான புகழேந்தி தங்கராசா படமாக உருவாக்கி இன்றைய தினம் இந்தியாவில் வெளியிட்டுவைக்கப்பட்டது.

 

Web Design by Srilanka Muslims Web Team