பட்ஜடுக்கு ஆதரவாக 07 துரோகிகளும் வக்களித்தால் மு.கா, ம.கா நடவடிக்கை எடுக்குமா? - Sri Lanka Muslim

பட்ஜடுக்கு ஆதரவாக 07 துரோகிகளும் வக்களித்தால் மு.கா, ம.கா நடவடிக்கை எடுக்குமா?

Contributors

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்களை தவிர்ந்த 07 பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த முறையும் (05ஆவது அரசின் வாக்கெடுப்புக்கு) ஆதரவு வழங்கினால் அந்த கட்சிகளின் 07 துரோகிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுப்பதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் தலை சிறந்த தலைவர்களாகவே நீங்கள் நிச்சயம் மாறுவீர்கள் என மு.கா, ம.கா கட்சியின் தலைவர்களுக்கு பகிரங்கமாக வேண்டி நிற்கின்றோம்.

துரோகிகளையும், முனாபிக் தன அரசியல் கலாச்சாரத்தை கொண்டதே இலங்கையின் முஸ்லிம் அரசியல் என்ற எதிர்வுகூரலுக்கு, பிரதான முஸ்லிம் கட்சிகளான மு.கா மற்றும் ம.கா வின் தலைவர்கள் தவிர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உதாரணமானவர்களாக காணப்படுவது முஸ்லிம் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. மு.காவின் கட்சியின் எம்பிகளின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிக ஏமாற்றத்தை தந்தால் அவற்றை கணக்கில் எடுக்கும் நிலையில் முஸ்லிம் சமூகம் இப்போது இல்லை அவர்கள் அடிக்கடி முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டதால் அவர்களின் எதிர்கால அரசியல் கேள்விக்குறியான நிலமையில் தான் இருக்கின்றது. அவர்கள் தற்போது அரசின் கைக்கூலியாக முழுமையாக மாறிவிட்டனர்.

ஆனால் அதற்கு மாற்றமாக மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தந்த கட்சியின் தலைவரின் நற் தலைமைத்துவ பன்பை அறிந்து அந்த கட்சியில் புதிய 3 உறுப்பினர்களை மக்கள் நாடாளுமன்றிற்கு அனுப்பி வைத்தார்கள் ஆனால் அவர்களில் தலைவரைத்தவிர்ந்த 3 எம்பிகளும் அரசாங்கத்திற்கு கூஜா தூக்கும் நிலையிலும், அரசாங்கத்தின் பிழைகளை – சரி காணும் அடிமைத்தன அரசியலுக்குள் இந்த எம் பிக்கள் சென்றுள்ளது மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

அதில் புத்தளத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி , அநுராதரபுரத்தின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் ஆகியோருடன் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபின் ஆகியோர் அந்த கட்சியின் தலைவர், தான் தகப்பன் போன்று தங்களை உருவாக்க காரணமாக இருந்த தலைவரை இந்த அரசு சிறைபிடிப்பத்த போதும், மனிதாபிமானம் கூட இல்லாத முறையில் அரசுக்கு கூஜா தூக்கி அந்த தலைவரை 06 மாத கால சிறைப்பிடிப்பதற்கு மிக பிரதான காரணமானவர்களாகவும், அவரின் விடுதலைக்கு 10% கூட முயற்சி செய்ய முடியாத நிலைக்குச் சென்றது முஸ்லிம் சமூகத்திற்கே பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. குறிப்பாக அரசுக்கு ஆதரவாக முழுமையாக செயற்பட்ட இஷாக், அலி சப்ரி ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்த அடுத்த வாரம் அந்த கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டார். அப்போது இந்த கைதுக்கு பிரதான காரணமாக உள்ள அரசுக்கு இந்த எம்பிக்கள் வழங்கிய அழுத்தமே கைதுக்கு காரணம் என்று கூறப்படுகின்றது. இதன் பின்னர் அவர்களில் இஷாக், அலி சப்ரி ஆகியோரை மக்களும், அந்த கட்சியும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கவில்லை

ஆனால், 2 பக்க தோணியின் நிலைப்பாட்டில் உள்ள பாராளும்னற உறுப்பினர் முஷாரப் அந்த கட்சியின் தலைவருக்கும், அச்சமூகத்திற்கும் செய்யும் துரோகங்கள் ஏறாலமாக உள்ளது. தான் தேர்தல் கேட்கும் போது ”மொட்டு ஹராம் என்றால் ஹராம் தான் “, ”தலைவருக்கு எதிரான அரசியல் காழ்ப்புணர்ச்சியின் போது தன் தலைவருக்கு அம்பாக செயற்படுவேன்” என்று கூறிய முஷாரப் மொட்டுவின் அடிமையாக மாறிய கதை தொடர்பில் நாம் எத்தனை பேர் அறிந்துள்ளோம்.

அரசின் பக்கம் சாய்ந்த எம்பி (கள்): அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடந்த தேர்தலில் சஜித் அணியுடன் இணைந்து ராஜபக்‌ஷ அரசின் அடாவடி அரசியலுக்கு எதிராக செயற்பட்டது அவ்வாறே வாக்கையும் சேகரித்து. அது போல் மொட்டுவின் வெற்றியின் பின் எதிர்க்கட்சி பக்கம் இருந்து செயற்பட்ட இரு கட்சிகளும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான போக்குகளையும், ஜனாஸா எரிப்புக்களையும் எதிர்த்து குரல் கொடுத்திருந்தது. அவ்வாறு இருக்கும் போது இந்த இரு கட்சியின் 07 பாராளுமன்ற உறுப்பினர்களும் மெளனியாக இருந்த மொட்டுக்கு ஆதரவாகவே இயங்கினார்கள்.

இவ்வாறன குரல்களுக்கு எதிராக, பொய் வழக்கொன்றில் ம.கா கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ராஜபக்‌ஷக்களின் திட்டமிட்ட கைது படத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். அதன் போது அந்த கட்சியில் இருந்த எம்பிகள் தனது தலைவரின் விடுதலைக்கு முயற்சிக்காமால் தங்களின் சுகபோகங்களுக்காக மெல்ல மெல்ல சாய்ந்தனர்.

அதில் ;
i ; 20 ஆவது அரசியலமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த முஷாரப்:

20ஆவது அரசியலமைப்பு எதிராக கட்சியும் முழு முஸ்லிம் சமூகமும் எதிர்த்திருந்த போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சியின் தலைவர்கள் தவிர்ந்த 07 எம்பிக்கள் 20க்கு ஆதரவு வழங்கி அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்திருந்தனர். அந்த நேரத்தில் ராஜபக்‌ஷ அரசு முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸாக்களை எறியூட்டும் படம் நடைபெற்ற போது அதற்கான எதிரான ஒப்புதல்களை பெற்றுக்கொள்ளாமல் அரசுக்கு கண்ணைப் பொத்தி வாக்களித்தமை முழு சமூகத்தையும் குழு தோண்டி புதைத்திருந்தனர் இந்த சமூகத்தை வைத்து அடமாணம் வைத்தனர்.

ஆனால், இதில் முஷாரப் எம்பி 20 க்கு எதிராகவும், 20 இல் காணப்பட்ட “இரட்டை பிரஜாவுரிமை” சரத்துக்கு ஆதரவாக வாக்கையும் வழங்கி பசிலின் பற்றாளனாக மாறுவதற்கு கட்சியின் எதிரான தீர்மானத்தை எடுத்தமை முஷாரபின் நாடகத்தை வெளிப்படுத்திருந்தமை மாத்திரமின்றி, முஷாரபின் இஹ்லாசான பயணம் தடுமாறியதை தெளிவாக அவதானிக்க முடிந்தது .

ii : மொட்டு அரசின் இடைக்கால பட்ஜெட் :

ராஜபகக்‌ஷ அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் கொண்டுவரப்பட்ட இடைக்கால பட்ஜெட்டுக்கு ஆதரவாக இந்த 07 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்து தங்களது மொட்டு விசுவாங்களையும் வெளிப்படுத்தினர். அதிலும் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் வாக்களிக்காமல் தவிர்ந்து நடுநிலையான போல் வெளிப்படுத்தினார்.

iii : போர்ட் சிட்டி சட்டமூல வாக்கெடுப்பு :

இலங்கையின் வளங்களை அன்னிய நாட்டுக்கு வழங்கும் போட் சிட்டி வாக்களிப்புக்கும் இந்த 07 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்து அரசின் விசுவாசிகளாக தங்களை அடையாளப்படுத்தினர். குறிப்பாக நீதிமன்றினால் இந்த சட்டமூலம் தவறானது என அறிவிக்கப்பட்டும் அரசின் பெரும்பானை பலம் மூலம் பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட அந்த சட்ட மூலத்திற்கு, கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக 07 எம்பிக்களும் வாக்களித்து மொட்டுவின் கூஜாக்களாக மாறினார்கள்.

iv : கம்பன்பிலவுக்கு எதிரான பிரேரணை:

இலங்கையின் அரசியல் அதிகம் இனவாதத்தை விதைத்து, முஸ்லிம் சமூகத்தை அதிகம் சீண்டி குறிப்பாக ரிஷாத் பதியுதீனை இனவாதியாக சித்தரித்து, பயங்கரவாதியாக ரிஷாத் பதியுதீனை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த பிரதான நபரும் இலங்கை மக்களின் வாழ்வாதரத்தை கைவைத்து மக்களை இன்னலுக்குள்ளாகியவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாப்பிரேரணை அ.இ.ம. காங்கிரஸின் 03 உறுப்பினர்களும் ஆதரவாகவே வாக்களித்தனர்.

அதே நேரம் ம.கா தலைவரின் மனைவி போலி வழக்கில் சிறைப்படுத்தப்பட்டிருந்தும் மனசாட்சியுடன் நடந்துகொள்ளாமலே வாக்களித்தவர்களே!

v; இறுதியாக வரும் 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜட்;

கோட்டா அரசின் 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜட் இவ்வாரம் கொண்டு வரப்படுகின்றது இதற்கு ஆதரவாக இந்த 07 கூஜா தூக்கிகளும் நிச்சயம் வாக்களிக்க வேண்டிய நிலையில் இருப்பதாக அறிய முடிகின்றது.

குறிப்பாக கோட்டா அரசுடன் சுகபோகங்களை அனுபவித்த இந்த 07 பேரும் தங்களுக்கான பணம், வாகனம், தொழில், வீதி போன்றவற்றை பெற்றுவிட்டு அடிமையாக மாறிவிட்டனர்.

இவர்கள் இந்த பட்ஜட் க்கு எதிராக வாக்களிக்க முடியாத நிலையில் இருக்கின்றதாகவும் அதற்கு தாங்களின் நிலைப்பாட்டத்தை சாதமாக மாற்றிக்கொள்ள முயற்சிப்பதாகவும் அறிய முடிகின்றது.

இவர்கள் வாக்களித்து சமூகத்திற்கும் அந்த கட்சிக்கும் எதிரான போக்கை கொண்டு செயற்பட்டால் முஷாரப், ஹரீஸ், இஷாக், பைஷல், நசீர், அலி சப்ரி, தெளபீக் போன்ற எம்பிகள் அனைவரின் அரசியலும் துரோக அரசியலாகவே மாறிவரும் . இது தொடர்பில் இந்த 07 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் நிச்சயம் சிந்தித்து செயற்பட வேண்டும்.

அல்லது

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி தலைவர்கள் இன்னும் இவர்களுக்கு ஆதரவுகளை வழங்கி செயற்பட்டாமல் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என வேண்டி நிற்கின்றோம்.

Web Design by Srilanka Muslims Web Team