பட்டப்பகலில் வங்கி முகாமையாளரை கத்தியால் குத்திய நபர் - பிபிலையில் சம்பவம்! - Sri Lanka Muslim

பட்டப்பகலில் வங்கி முகாமையாளரை கத்தியால் குத்திய நபர் – பிபிலையில் சம்பவம்!

Contributors

பிபில,ஹெவல்வல பிரதேச வங்கி ஒன்றில், பட்டப்பகலில் முகாமையாளரை வங்கிக்கு உள்ளேயே வந்து கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த முகாமையாளர் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் பிபில கொட்டகம கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான ஹெவல்வெல கூட்டுறவு கிராமிய வங்கியின் முகாமையாளராவார்.

முகமூடி அணிந்த நபர் ஒருவர் முகாமையாளரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பிபில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team