பதவி மோகம் கொண்ட நஸீர் அஹமதும் மற்றும் நமது ஒட்டுண்ணிகளும்..! - Sri Lanka Muslim

பதவி மோகம் கொண்ட நஸீர் அஹமதும் மற்றும் நமது ஒட்டுண்ணிகளும்..!

Contributors

ஏறாவூர், கல்குடா தொகுதி மக்களின் வாக்குளால் 2019 பொதுத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டு பாராளுமன்ற கட்டிடம் சென்ற நஸீர் அஹ்மத் ( குர்ஆனை முழுமையாக மறந்திருக்க வாய்ப்புண்டு என்பதால் ஹாபிஸ் கேன்சல் செய்யப்பட்டது ) மற்றும் அவரோடு சேர்ந்த நமது ஒட்டுண்ணிகள் முஸ்லிம் சமூகத்தின் வலியை உணராத பிணங்களாக நோக்ககப்பட வேண்டியவர்கள் என்பது அவர்கள் பற்றிய தேடல் சொல்கின்றது.

காரணங்கள் பல

1) 20 ம் திருத்ததில் நிறைவேற்று அதிகார முறைமைக்கு முஸ்லிம் சமூகத்தின் தேசிய சமய சமூகப் பிரச்சினையாக பார்க்கப்பட்ட கொரோனா ஜனாஸா எரிப்பைக் கூட நிறுத்த வக்கற்றவர்களாக நிபந்தனைகள் எதுவும் இன்றி வாக்களித்தமை.

2) ஜனாதிபதி கடும் பௌத்த போக்காளர். அவரால் நமது சமூகம் பல இன்னல்களை அனுபவிக்க நேரலாம் என புத்திஜீவிகளால் ஆறுடம் கூறப்பட்டு, அவ்வாறு மெல்ல மெல்ல நடந்த போதும் பணம் பதவிக்காக இந்த அரசுடன் ஒட்டிக் கொண்டு 380 பெட்டிகளே எரிக்கப்பட்டன என ஞானம் பேசியமை. ஏனைய ஒட்டுண்ணுகள் அதற்கு மௌனம் காத்தமை.

3) முன்னாள் அமைச்சரான சகோதரர் ரிஷாத் , சமூக செயற்பாட்டாளர் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், எழுத்தாளர் அஹ்னஃப் ஜெஸீம் மற்றும் பல அப்பாவிகளை அநியாயமாக கைது செய்து இந்த அரசால் அவர்கள் மானசீகமாக வதைக்கப்பட்ட போதும் தமது மனதில் கொஞ்சம் கூட ஈரமின்றி, அரசோடு திரைமறைவில் பயணித்தமை.

4) நடப்பு அரசானது நம்மையும் நமது கலாசார விழுமியங்களையும்
நசுக்குவதையும்
வெள்ளையர் நமக்கென வழங்கிய முஸ்லிம் தனியார் சட்டத்தையும் ஒழிக்க முயற்சிப்பது தெரிந்தும் மக்கள் தனக்கு அமானிதமாக வழங்கிய அவர்களின் பொன்னான வாக்குகளை
எவ்வித நிபந்தனைகளும் இன்றி இந்த அரசுக்கு
முக்கி முக்கி முபாரக் முட்டுக்கோடுத்தமை போன்ற பல நடவடிக்கைகள் நாடு இப்போது சென்றுள்ள நிலைக்கு காரணங்களில் ஒன்றாகவும் பார்க்க முடியும்.

👉இறுதியாக இவரது பதவி ஏற்பால் மொட்டுக் கட்சிக்குள் குழப்பங்கள் ஏற்பட 100% வீத வாய்ப்புக்கள் அதிகம்.

மொக்குத்தனமான, தூர நோக்கற்ற முஸ்லிம் தலைமைகளின் தெரிவே இவர்கள் போன்றோர் சமூகத்தை அடகு வைக்க காரணமாகவும் அமைந்துள்ளது.

எம்.ஜே. எம். ரிஸ்வான் மதனி
18/04/2022

Web Design by Srilanka Muslims Web Team