பதியுதீன் விவகாரம் : பல பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் » Sri Lanka Muslim

பதியுதீன் விவகாரம் : பல பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Contributors
author image

Editorial Team

Untitled

இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவின் கீழ் கைது  செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன்  05  மாதங்களின் பின் செய்யப்பட்டதை தொடர்ந்து இலங்கை அரசியலில் கடந்த வாரம் பேசப்பட்டிருந்த அரசியல் சர்ச்சைகளுக்கு அமைவாக, இரண்டு முக்கிய பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

அதில், இலங்கை பொலிஸ் பிரிவின் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்னவின் இடத்திற்கு பதிலாக அஜித் ரோஹன நியமிக்கப்பட்டுள்ளதுடன், இரகசியப் பொலிஸின் பிரதி அத்தியட்சகர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதசிங்க, அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, மேல் மாகாண (வட பிராந்திய) பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இரு பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றத்திற்கு பிரதான காரணம்;  முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்ட பின்னர் அரசாங்க தரப்பினருக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடியே பிரதான காரணமாக பேசப்படுகின்றது.

ரியாஜ் பதியுதீன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் நேரடி தொடர்பு என அரசியல் வாதிகள் போல் 5 மாதங்களுக்கு முன்னர் பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய கூறிய விடயம் பிழையெனவும் எழும்பிய வாத பிரதிவாதங்கள் காரணமாகவே அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டிருந்த ரியாஜ் பதியுதீன் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்க முடியாது எனவும், அதனால் 5 மாதங்களின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Web Design by The Design Lanka