பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை வழக்கின் சந்தேகநபர் ஒருவருக்கு பிணை! - Sri Lanka Muslim

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை வழக்கின் சந்தேகநபர் ஒருவருக்கு பிணை!

Contributors

பம்பலப்பிட்டி பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவரான மொஹமட் பௌஸ்டீன் நேற்று(21) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 50,000 ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும் 5 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

எனினும் இவரது கடவுச்சீட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கின் ஏனைய சந்தேகநபர்கள் அனைவரும் எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத தெரண

Web Design by Srilanka Muslims Web Team