பயங்கரவாதி பிரபாகரன் எப்படி சுதந்திர வீரனாக முடியும் ? - Sri Lanka Muslim

பயங்கரவாதி பிரபாகரன் எப்படி சுதந்திர வீரனாக முடியும் ?

Contributors

பயங்கரவாத கொலைகார பிரபாகரனை சுதந்திர வீரன் என புகழும் எம்.பிக்கள் வடக்கில் இருக்கும் வரை அங்கு இராணுவத்தினரை அதிகரிக்கச் செய்ய வேண்டியது கட்டாயமானதாகும். இதேவேளை யாழில் ஆயிரம் கணக்கான பிள்ளைகளை கொன்று

 

குவித்த பயங்கரவாதியை சுதந்திர வீரர் என கூறி சுதந்திர வீரர்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக இன்று  26 சபையில் தெரிவித்துள்ளார் .

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் .

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், பாராளுமன்றில் புகழாரம் சூட்டியுள்ளார்.பிரபாகரனின் போராட்டமானது நியாயமானது எனவும், அதில் தவறில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் ஒர் சுதந்திரப் போராட்டமாக கருதப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீதரனின் உரைக்கு   பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஸ்ரீதரனின் உரைக்கு, அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.பிரபாகரன் தொடர்பில் ஸ்ரீதரன் ஆற்றிய உரையின் சர்ச்சைக்குரிய பகுதிகளை ஹன்சார்டிலிருந்து நீக்கிவிடுமாறு பிரதி சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழத் தலைவர்களை கொன்று குவித்த பிரபாகரனை கடவுளாக வர்ணிக்கின்றார்  பிரபாகரன் எப்படி சுதந்திர போராட்ட வீரர் ஆவார்? எமது மக்களை கொலை செய்வதை விடுத்து பாருங்கள். ஈபிடிபி, புளொட் உட்பட தமிழத் தலைவர்களை கொலை செய்தது யார்? இவையனைத்தையும் இல்லாதொழித்து வட மாகாண சபையை தேர்தல் நடாத்தி ஜனாதிபதி தான் தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கினார் .

1905 முதல் 109 வருடங்களாக மக்கள் பெற்றிராத ஜனநாயகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமயிலான எமது அரசாங்கமே வழங்கியது. வட பகுதி தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கே வாக்களிப்பர் என்று தெரிந்தும் வட மாகாண சபைத் தேர்தலை நாம் நடத்தினோம். ஒரு கள்ள வாக்காவது இத்தேர்தலில் இடப்படவில்லை. வட பகுதி மக்களின் நகை நட்டுக்களை பிரபாகரன் பறித்துச் செல்லவில்லையா? கப்பம் பெறவில்லையா? சிறுபிள்ளைகளை கடத்தி படையில் இணைக்கவில்லையா? இவரைத் தானா சுதந்திரத்திற்கான போராளி என்கின்றார்.

109 வருடங்களின் பின்னர் வட பகுதி மக்களுக்கு ஜனநாயகத்தை அனுபவிக்க சந்தர்ப்பம் பெற்றுக் கொடுத்ததை மறந்து பேசாதீர்கள். பல்கலைக்கழக மாணவர்களை பிரபாகரன் கடத்திச் சென்று கொன்றார். புலிகள் ஒழிக்கப்பட்டதன் மூலம் வட பகுதி மாணவர்களுக்கு நன்மை ஏற்படவில்லையா? நாம் அனைவரும் இலங்கையர் என்பதை உணர்ந்து செயற்பட பழக வேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழும் நிலை உருவாக்கப்படுவதையே நாம் விரும்புகிறோம். எனவே இனவாதத்தை தூண்ட வேண்டாமென கோருகிறேன். என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றும்போது , பிரபாகரனை சுதந்திர போராளி எனவும் வீரர் எனவும் குறிப்பிட்ட ஸ்ரீதரன் எம். பி., பிரபாகரன் பயங்கர வாதியல்ல என்றும் சபையில் கூறினார். தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. ஒருவர் இவ்வாறு கூறுவதன் மூலம் வடக்கில் ஏன் இன்னும் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பதற்கு சரியான பதில் கிடைக்கும். தமிழ் தலைவர்களை கொலைசெய்த ஒருவரை ஸ்ரீதரன் எம்.பி. தேசிய தலைவராக விபரிக்கிறார். இந்த நிலையில் வடக்கில் இராணுவத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team