பயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளபிரதேசங்கள் விடுவிக்கப்படாது..! - Sri Lanka Muslim

பயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளபிரதேசங்கள் விடுவிக்கப்படாது..!

Contributors

பயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கு மாகாணத்தில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்
இருக்குமென, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி Dr.ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) (கடந்த 24 மணித்தியாலத்தில்) 192 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளதாகவும்,

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 137 பேரும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 52 பேரும், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 03 பேரும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜுன் 01ம் திகதி மற்றும் ஜுன் 15ம் திகதியையும் ஒப்பிடும் போது சராசரியாக திருகோணமலையில் தினமும் 80 கொரோனா நோயாளர்களும்,
15ம் திகதிக்கு பின்னர் தினமும் 30 நோயாளர்களாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் சராசரி 30 கொரோனா நோயாளர்களும், 15ம் திகதிக்கு பின்னர் சராசரி
15 நோயாளர்கள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜுன் 01ம் திகதி மற்றும் ஜுன் 15ஆம் திகதியையும் ஒப்பிடும் போது சராசரியாக தினமும் 100 ற்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்கள்.

இதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லையெனவும்,
சில நாட்களில் வழமைக்கு மாறாக கூடுதலான நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, ஏறாவூர்,
ஓட்டமாவடி போன்ற பிரதேசங்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

கொரோனா இரண்டாவது அலையில் 25 பேரும், மூன்றாவது அலையில் 214 பேரும் மரணமடைந்துள்ளதாகவும்,

திருகோணமலைமாவட்டத்தில் 123 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 பேரும், அம்பாறை RDHS பிரிவில் 24 பேரும், கல்முனை RDHSபிரிவில் 31 பேருமாக 239 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

திருகோணமலை RDHS பிரிவில்4071 பேரும்,
மட்டக்களப்பு RDHSபிரிவில் 4532 பேரும், கல்முனைRDHSபிரிவில் 2244 பேரும், அம்பாறைRDHS பிரிவில் 1829 பேருமாக கிழக்கு மாகாணத்தில் 12,676 பேருக்கு
கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பயணத்தடை நீக்கப்படும் பட்சத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சமூக இடைவெளியைப் பேணும் முகமாக அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும்,

தவறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும்
அறிவித்துள்ளார்.

அவசிய தேவையின்றி பொது மக்கள் எவரும் வீட்டில் இருந்து வெளியேறி வீதிகளில் நடமாட வேண்டாமெனவும், அத்தியாவசிய தேவைக்காக வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வெளியில் செல்ல வேண்டுமெனவும் அவர் மேலும்
தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team