பயளின் சூறாவளி இலங்கையை பாதிக்காது -காலநிலை அவதான நிலையம் - Sri Lanka Muslim

பயளின் சூறாவளி இலங்கையை பாதிக்காது -காலநிலை அவதான நிலையம்

Contributors

 

(DC)

வங்காளவிரிகுடாவில் நிலை கொண்டிருந்த பயளின் என்னும் சூறாவளி நேற்று மாலை முதல் தீவிரமடைந்து வருகின்ற போதிலும் இதனால் இலங்கைக்கு எவ்வித நேரடிப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லையென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பயளின் சூறாவளி இந்தியாவை நோக்கி நகருவதனால் இலங்கைக்கு நேரடி பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும், மறைமுக தாக்கமாக நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழை மற்றும் பலத்த காற்றினை எதிர்பார்க்கலாமெனவும் குறிப்பிட்டுள்ளது.

பயளின் சூறாவளியின் விளைவாக இன்றும் நாளையும், நாட்டின் வடக்கு, வடமேல், மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யக் கூடும். அதேநேரம், கிழக்கு மாகாணத்தில் மாலை அல்லது பிற்பகல் வேளைகளில் இடியுடன் அதிக மழை பெய்யுமெனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team