பயிர்ச்செய்கையில் இராணுவத்தை களமிறக்கும் கோட்டா! - Sri Lanka Muslim

பயிர்ச்செய்கையில் இராணுவத்தை களமிறக்கும் கோட்டா!

Contributors

மொனராகலை – சியம்பலாண்டுவ மகா வித்தியாலயம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில், நேற்று (07) தேசிய பாடசாலையாக மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

மொனராகலை – சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்துக்குச் சென்றுகொண்டிருந்த ஜனாதிபதி, வழியில் கூடியிருந்த விவசாயிகளைச் சந்தித்தார். அவர்களிடம், பயிர்ச் செய்கைகள் தொடர்பில் கேட்டறிந்த ஜனாதிபதி, சேதன பசளை பயன்பாடு தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில், இராணுவத்தை பெரும் போக பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபடுத்த போவதாக தெரிவித்துள்ளார்

தொழில்நுட்ப அறிவுடன் சேதனப் பசளையை எவ்வாறு உற்பத்தி செய்வது மற்றும் விவசாயத்துக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் போதிய விழிப்புணர்வு இல்லாமையால், ஒரு சில குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலச் சந்ததியினருக்கு நஞ்சற்ற உணவை வழங்குவதற்காக, நாட்டில் பசுமை விவசாயத்தை உருவாக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார்.

Web Design by Srilanka Muslims Web Team