பலமிழந்துள்ள இலங்கையின் கழுத்தை பலம் பொருந்திய நாடுகள் இறுக்கிப்பிடிக்க முற்படுகின்றன" - விமல்! - Sri Lanka Muslim

பலமிழந்துள்ள இலங்கையின் கழுத்தை பலம் பொருந்திய நாடுகள் இறுக்கிப்பிடிக்க முற்படுகின்றன” – விமல்!

Contributors

பொறிக்குள் இலங்கையை சிக்க வைப்பதற்கு இந்தியாவும், மேற்குலகமும் முயற்சிக்கின்றன – விமல்!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, தமது பொறிக்குள் இலங்கையை சிக்க வைப்பதற்கு இந்தியாவும், மேற்குலகமும் முயற்சிக்கின்றன என்று ‘உத்தர லங்கா சபாகயவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நேற்று (27) நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

“இலங்கை பொருளாதார ரீதியில் பலமிழந்துள்ளது. இதனை வைத்து பலம்பொருந்திய நாடுகள் இலங்கையின் கழுத்தை இறுக்கி பிடிக்க முற்படுகின்றன.

தமது உபாயத்துக்குள் இலங்கையை கொண்டுவருவதற்கு கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுவருகின்றன.

தமது நாட்டு ரூபாவை இலங்கையில் செயற்படுத்துவதற்கு இந்தியா முயற்சிக்கின்றது. அவ்வாறு நடந்தால் இலங்கை இந்தியாவின் மாநிலமாக மாறக்கூடிய சூழ்நிலைமை தானாகவே உருவாகிவிடும்.

மறுபுறத்தில் நாட்டில் போராட்டங்களை தூண்டிவிட்டு, அராஜக நிலைமையொன்றை உருவாக்குவதற்கு மேற்குலக நாடுகள் திட்டம் தீட்டுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team