பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம்! - Sri Lanka Muslim

பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம்!

Contributors

பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை பிரயோகித்துள்ளனர்.

ருஹுணு மற்றும் களனி பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் அடக்குமுறைக்கு எதிராகவும், அநீதியான முறையில் வழங்கப்பட்ட புலமைப்பரிசில்களை இரத்து செய்யுமாறும் கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு முன்னெடுத்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team