பல புதிய பிரதியமைச்சர்கள் இன்று சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளனர் - Sri Lanka Muslim

பல புதிய பிரதியமைச்சர்கள் இன்று சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளனர்

Contributors

new-ministers1

புதிய பிரதியமைச்சர்கள் பலர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளவிசேட நிகழ்வில் புதிய பிரதியமைச்சர்கள் ஜனா திபதி முன்னிலையில் சத்தியப் பிர மாணம் செய்துகொள்ளவுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

புதிய பிரதியமைச்சர்களின் எண் ணிக்கை தொடர்பில் பல்வேறு கருத் துக்கள் நிலவுகின்றபோதும் 14 பேர் புதிய பிரதியமைச்சர்களாக நியமனம் செய்யலாமென நம்பத்தகுந்த வட் டாரங்கள் தெரிவித்தன. தற்போது பிரதியமைச்சர் களைக் கொண்டிராத அமைச்சு க்களுக்கு புதிய பிரதியமைச் சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக வும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. -தினகரன்

அதேவேளை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மூன்று பிரதி அமைச்சர்  பதவிகள் வழங்குமாறு அக்கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாகவும்  அவ்வாறில்லாவிட்டால் தனது கட்சிக்கு பிரதி அமைச்சர் பதவி தேவையில்லை எனஅவர்  ஜனாதிபதியிவடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானமை குறிப்பிடத் தக்கது .

Web Design by Srilanka Muslims Web Team