பழனிசாமி இராஜினாமா: ஸ்டாலின் 7ம் திகதி பதவியேற்பு - Sri Lanka Muslim

பழனிசாமி இராஜினாமா: ஸ்டாலின் 7ம் திகதி பதவியேற்பு

Contributors

தமிழக முதலமைச்சர் பதவியை, எடப்பாடி பழனிசாமி இராஜினாமா செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது இராஜினாமா கடிதத்தை, எடப்பாடி பழனிசாமி, ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் திமுக ஆமோக வெற்றியை தனதாக்கிக் கொண்ட நிலையிலேயே, எடப்பாடி பழனிசாமி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதலமைச்சராக எதிர்வரும் 7ம் திகதி பதவியேற்கவுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் மிகவும் எழிமையான முறையில் இந்த பதவியேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதென தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

Web Design by Srilanka Muslims Web Team