பாகிஸ்தானுக்கெதிரான டுவென்டி டுவென்டி தொடருக்கான தென்னாபிரிக்க குழாம் அறிவிப்பு - Sri Lanka Muslim

பாகிஸ்தானுக்கெதிரான டுவென்டி டுவென்டி தொடருக்கான தென்னாபிரிக்க குழாம் அறிவிப்பு

Contributors

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும், பாகிஸ்தான் அணிக்குமிடையிலான டுவென்டி டுவென்டி தொடருக்கான தென்னாபிரிக்க குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 2 டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகள் அடங்கிய இத்தொடர் நாளை ஆரம்பிக்கவுள்ளது. இத்தொடரின் இறுதிப் பகுதியாக டுவென்டி டுவென்டி தொடர் இடம்பெறவுள்ளதோடு, அத்தொடருக்கான குழாம் முன்னரே அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையிலேயே தென்னாபிரிக்க டுவென்டி டுவென்டி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பஃப் டு பிளெஸிஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் குழாமில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற டுவென்டி டுவென்டி தொடரில் இடம்பெற்றிருந்த பர்ஹான் பெஹர்டியன், றோறி கிளெய்ன்வேல்ட்ற் இருவரும் இக்குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை. அக்குழாமில் இடம்பெற்றிருக்கான ஹசிம் அம்லா, டேல் ஸ்ரெய்ன் இருவரும் இக்குழாமில் இடம்பெற்றுள்ளனர்.
அறிவிக்கப்பட்டுள்ள குழாம்: பஃப் டு பிளெஸிஸ், ஹசிம் அம்லா, ஹென்றி டேவிட்ஸ், குயின்டன் டீ கொக், ஏபி.டி.வில்லியர்ஸ், ஜே.பி.டுமினி, இம்ரான் தாஹிர், றயன் மக்லரன், டேவிட் மில்லர், மோர்னி மோர்க்கல், வெய்ன் பார்னெல், ஆரொன் ஃபங்கிசோ, டேல் ஸ்ரெய்ன், லொன்வபோ சொற்சொபி, டேவிட் வியஸி

Web Design by Srilanka Muslims Web Team