பாகிஸ்தான் தலிபான்களின் புதிய தலைவராக மௌலானா பஸ்லுல்லா நியமனம் - Sri Lanka Muslim

பாகிஸ்தான் தலிபான்களின் புதிய தலைவராக மௌலானா பஸ்லுல்லா நியமனம்

Contributors

பாகிஸ்தான் தலிபான்கள் தமது புதிய தலைவராக மௌலானா பஸ்லுல்லா பெயரிட்டுள்ளார்.

அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் தலிபான்களின் தலைவர் ஹக்கிமுல்லா மஹ்சூட் கடந்த முதலாம் திகதி கொல்லப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியத்தில் நடைபெற்ற மாநாட்டின் பின்னர் தலிபான்களின் புதிய தலைவராக மௌலானா பஸ்லுல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாநாட்டின் பின்னர் அடையாளம் தெரியாத பகுதியொன்றில் வைத்து தலிபான்களின் இடைக்காலத் தலைவர் அஸ்மதுல்லா ஷாஹீன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஹக்கிமுல்லா மஹ்சூத்தை கொலை செய்ததன் மூலம் தலிபான்களுடனான சமானதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் முயற்சியை அமெரிக்கா முற்றாக அழிவடையச் செய்துள்ளதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.

மலாலா யூசுப்ஸாய் மீது பஸ்லுல்லாவின் கீழுவுள்ள ஆயுததாரிகளே தாக்குதலை நடத்தியிருந்ததுடன், சமாதான முயற்சிகளுக்கு அவர் அதிகளவில் எதிர்ப்புத் தெரிவிக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team