பாக்கிஸ்தானில் இலங்கை பிரஜைகொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஜனாதிபதி பிரதமர் எதிர்கட்சி தலைவர் கவலை..! - Sri Lanka Muslim

பாக்கிஸ்தானில் இலங்கை பிரஜைகொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஜனாதிபதி பிரதமர் எதிர்கட்சி தலைவர் கவலை..!

Contributors

பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஜனாதிபதி, பிரதமர், சஜித் பிரேமதாச ஆகியோர் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி, பாகிஸ்தானின் சியால்கோட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக தாம் மிகுந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தான் பிரதமரும் அவரது அரசாங்கமும்நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்யும் எஞ்சியுள்ள இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என நம்புவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பிரியந்த தியவர்த்தன மீதான ஈவிரக்கமற்ற உயிரை பறித்த தாக்குதல் அதிர்ச்சியடைவைத்துள்ளது என தெரிவித்துள்ள பிரதமர் தனது இதயம் பிரியந்த தியவர்த்தனவின் குடும்பம் அவரது மனைவி குறித்து வேதனைப்படுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். பிரதமர் இம்ரான்கான் நீதியின் அனைவரையும் நிறுத்துவது குறித்த தனது உறுதிமொழியை நிறைவேற்றுவார் என இலங்கை மக்களும் நானும் நம்பிக்கை கொண்டுள்ளேன் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரியந்த தியவதன ஒருவரின் மகன் தந்தை மற்றும் சகோதரர் ஆவார். அவரது மரணம் மிகவும் கொடூரமானது சோகமான மற்றும் நியாயப்படுத்த முடியாததும் ஆகும்.
@ImranKhanPTI
நீதிக்கான உங்கள் வாக்குறுதி மதிக்கப்படும் என்று நம்புகிறோம்தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிரியந்தவின் குடும்பத்திற்கான நீதிக்காக நாங்கள் போராடி, பதில்களைத் தேடும் அதே வேளையில், உலகை ஆக்கிரமித்து வரும் வளர்ந்து வரும் சகிப்புத்தன்மை இன்மைக்கு எதிராக போராடுவதன் மூலம் அவரது வாழ்க்கையையும் மதிக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்

Web Design by Srilanka Muslims Web Team