பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டாம் : கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை..! - Sri Lanka Muslim

பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டாம் : கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை..!

Contributors
author image

Editorial Team

பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக பாடசாலை அமைப்பை மூடுவதால், மாணவர்களின் அறிவாற்றல் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
பெற்றோரின் சரியான வழிகாட்டுதல் இல்லாத நிலையில் மாணவர்கள், இணையங்களில் எதிர்கொள் ளும் அச்சுறுத்தல்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாடசாலை களை முடிந்தவரை திறந்து வைக்குமாறு கேகாலையில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team