பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டும் திறக்கப்படாத கதவுகள்..! - Sri Lanka Muslim

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டும் திறக்கப்படாத கதவுகள்..!

Contributors

ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணி பகிஸ்கரிப்பு காரணமாக வவுனியாவில் பல பாடசாலைகள் பூட்டப்பட்டுள்ளதால் மாணவர்கள் திரும்பி செல்லும் நிலை காணப்பட்டது. 200க்கு உட்பட்ட மாணவர்களை கொண்ட பாடசாலைகளை திறக்குமாறு அரசாங்கம் அறிவித்தல் விடுத்த நிலையில் இன்று பாடசாலைகள் திறக்கப்படவிருந்த போதிலும் ஆசிரியர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் அவர்களது போராட்டம் தொடர்கின்றது.

இந்நிலையில் வவுனியாவில் 85 பாடசாலைகள் இன்று திறக்கப்படும் என வலயக்கல்வி அலுவலகங்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை பாடசாலைகள் பலவற்றின் முன் வாயிற்கதவு மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. இதன் காரணமாக பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பி சென்றிருந்தனர். இதேவேளை சில பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்ற போதிலும் குறைந்தளவான மாணவர்களே சென்றிருந்தனர்.

                                         

Web Design by Srilanka Muslims Web Team