பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிட ரூ.1648 கோடி செலவு..! - Sri Lanka Muslim

பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிட ரூ.1648 கோடி செலவு..!

Contributors
author image

Editorial Team

எதிர்வரும் 2023 ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு சுமார் 1648 கோடி ரூபாவை செலவிட எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய புதிய கல்வியாண்டுக்குத் தேவையான பாடசாலைப் பாடப்புத்தகங்களில் 45 சதவீதமானது அரச அச்சக கூட்டுத்தாபனத்தினாலும் ஏனைய 55 வீதம் தனியார் அச்சகத்தினாலும் அச்சிடப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் பாடப் புத்தகங்களை  அச்சிடுவதற்கான மூல காகிதம் இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team