பாடசாலை மாணவன் வகுப்பறையில் ஹெரோயினுடன் பிடிப்பட்டார்.

Read Time:1 Minute, 49 Second
பொல்கஹவெல நகரிலுள்ள பாடசாலை ஒன்றிலிருந்து ஹெரோயினுடன் மாணவன் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார் .
 இந்தப் பாடசாலையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையை அடுத்து 13 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் 18 வயதுடைய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார் .
இவரிடமிருந்து மூன்று பைக்கற் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
 இதேவேளை , இந்த மாணவனுக்கு ஹெரோயின் விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து இரண்டு பைக்கற் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது . கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
 இலங்கையில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் போதைப் பொருள் வியாபாரம் அதிகரித்துள்ளது .
 எனவே பாடசாலை செல்லும் தமது பிள்ளைகளின் நடவடிக்கைகள் மற்றும் தோற்றம் குறித்து பெற்றோர் மிகவும் அவதானத்துடன் செயல்பட வேண்டும் .
 மேலும் மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்து வயிற்றுப் பிழைப்பு செய்ய முனைபவர்களை சமூகநலவாதிகள் இனங்கண்டு அடையாளம் காட்ட வேண்டும் . இது காலத்தின் கட்டாய , அவசிய தேவையாகுமென வலியுறுத்தப்பட்டுள்ளது .(tn)
Previous post சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாயலத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
Next post பால்மாவின் விலையை அதிகரிக்க கோரிக்கை.