பாதுகாப்புக்கே அதிக நிதியை அரசாங்கம் ஒதுக்கும்: ஏஎவ்பி செய்தி ! - Sri Lanka Muslim

பாதுகாப்புக்கே அதிக நிதியை அரசாங்கம் ஒதுக்கும்: ஏஎவ்பி செய்தி !

Contributors

அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலும், பாதுகாப்புச் செலவுக்கே அதிகளவு நிதியை இலங்கை அரசாங்கம் ஒதுக்கவுள்ளதாக, ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

போருக்குப் பின்னர், இராணுவ பலத்தைக் குறைக்குமாறு அனைத்துலக அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதிலும், அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலும், பாதுகாப்புச் செலவுக்கே முன்னுரிமை கொடுத்து அதிகளவு நிதியை இலங்கை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டில் பாதுகாப்புச் செலவினங்களுக்காக 1.95 பில்லியன் டொலரை ஒதுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கம் போலவே, அடுத்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்திலும் பாதுகாப்புச் செலவினங்களுக்கே இலங்கை அரசாங்கம் அதிகளவு நிதியை ஒதுக்கவுள்ளது.

பாதுகாப்புச் செலவின ஒதுக்கீடு குறித்து அரசாங்கம் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. எனினும், தோற்கடிக்கப்பட்ட போராளிகள் மீள ஒன்றிணையாமல் தடுப்பதற்கு அதிகளவு நிதியை செலவிட வேண்டியுள்ளதாக முன்னர், இலங்கை அதிகாரிகள் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டில், இலங்கை அரசாங்கத்தின் மொத்த செலவினமான 2.543 ட்ரில்லியன் ரூபாவில், 12 சதவீதம் பாதுகாப்புச் செலவினங்களுக்கே ஒதுக்கப்படவுள்ளது என்றும் ஏஎவ்பி தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team