பானுக ராஜபக்ஷவை அணியில் இணைக்கக் கோரி ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்! - Sri Lanka Muslim

பானுக ராஜபக்ஷவை அணியில் இணைக்கக் கோரி ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்!

Contributors

பானுக ராஜபக்ஷவை இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணியில் சேர்க்கவேண்டும் என கோரி, கிரிக்கெட் இரசிகர்கள் இன்று இலங்கை கிரிக்கெட்கட்டுப்பாட்டுச் சபையின் தலைமையகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அணியில் பானுக ராஜபக்ஷவை சேர்க்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உடற்தகுதியை அடிப்படையாக வைத்து பானுக ராஜபக்சவை அணியிலிருந்து நீக்குவது நியாயமற்ற விடயம் என ரசிகர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை இது குறித்து நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ள விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ,  பானுக ராஜபக்ஷ சிறந்த எதிர்காலம் உள்ள வீரர். அவர் சிறந்த முறையில் திரும்பிவருவார் என எதிர்பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார். சுயாதீன தெரிவுக்குழுவும் பயிற்சி ஆலோசகர் மகேலஜெயவர்த்தனவுமே இந்தியா செல்லவுள்ள அணியை தெரிவு செய்தனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team