"பாய்லின் புயல் தாக்கம் கடுமையாக இருக்கும் - அமெரிக்கா எச்சரிக்கை! - Sri Lanka Muslim

“பாய்லின் புயல் தாக்கம் கடுமையாக இருக்கும் – அமெரிக்கா எச்சரிக்கை!

Contributors

பாய்லின் புயல் இன்று ஒடிசாவை தாக்க உள்ளது. இந்த புயல் பயங்கர சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க கடற்படையின் புயல் எச்சரிக்கை மையம் இன்று எச்சரித்தது. பியர்ல் துறைமுகத்தில் இயங்கும் அந்த மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தியா 14 ஆண்டுகளுக்கு பின் மிகப்பெரிய புயல் சேதத்தை சந்திக்க உள்ளது என்று கூறியுள்ளது.

மிசிகனைச் சேர்ந்த வானிலை நிபுணர் ஜெப் மாஸ்டர்ஸ் கூறுகையில், பாய்லின் புயல் ஒடிசாவை தாக்கும் போது சற்று வலு இழக்கலாம். ஒடிசா கடலோரம் பகுதியின் அமைப்பு காரணமாக பாய்லின் வேகம் குறையலாம். ஆனால் அதன் சீற்றத்தால் ஏற்படும் தாக்கம் குறைய வாய்ப்பு இல்லை. 1999�ம் ஆண்டு இந்தியாவில் புயலால் ஏற்பட்டது போன்ற சேதம் ஏற்படலாம் என்றார்.

லண்டன் வானிலை நிபுணர்கள் கூறுகையில், “பாய்லின் புயல் தாக்கம் பற்றி இந்தியர்கள் குறைவாக மதிப்பீட்டுடன் உள்ளனர். பாய்லின் புயல் வலுவடைந்தால் சூறைக் காற்று கூட வீச வாய்ப்புள்ளது என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team