பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில்லாத வரவு செலவுத் திட்ட விவாதம் - Sri Lanka Muslim

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில்லாத வரவு செலவுத் திட்ட விவாதம்

Contributors

வரவு-செலவுத்திட்ட விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றுவதற்காக எதிர்க்கட்சி சார்பில் இன்று எவருமே பிரசன்னமாகியிருக்கவில்லை. எதிர்க்கட்சி சார்பாக இன்றைய விவாதம் ஆரம்பித்து வைக்கப்படவிருந்த போதிலும், அதற்குரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருக்கவில்லை

பெருந்தெருக்கல், துறைமுகங்கள், கடல்சார், சிவில் விமான சேவைகள், மின்சக்தி, எரிசக்தி, பெற்றோலிய வளத்துறை அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதங்கள் இன்று பாராளுமன்றத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து விவாதத்தை ஆரம்பிப்பதற்கான உரிய உறுப்பினர்கள் சமூகமளிக்கும் வரை, பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் சபையில் உரைநிகழ்த்துவதற்கு அனுமதி வழங்குமாறு எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோன் அமரதுங்க அக்ராசனத்திடம் கோரிக்கையொன்றை விடுத்தார்.

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் தினேஷ் குணவர்தன, விவாதம் புரிவதற்கான தேவை எதிர்க்கட்சிக்கே இருப்பதாகவும், அதற்கான உரிய பேச்சாளர்கள் இல்லாவிட்டால், தினத்திற்குரிய விடங்களை நிறைவேற்றிக்கொள்ளும் இயலுமை அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், விவாதத்தை ஆரம்பிப்பதற்குரிய உறுப்பினர் ஒருவர் சபையில் பிரசன்னமாகும் வரை, அகில விராஜ் காரியவசத்திற்கு உரை நிகழ்த்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து சபையில் உரையாற்றிய அகில விராஜ் காரியவசம், முக்கியத்துவத்தின் அடிப்படையில் அபிவிருத்தி இலக்குகளை அரசாங்கம் தெரிவுசெய்யவில்லை என்று கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team