பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் பாதீட்டிற்கு ஆதரவாக ஏன் வாக்களிக்க வேண்டும்? - Sri Lanka Muslim

பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் பாதீட்டிற்கு ஆதரவாக ஏன் வாக்களிக்க வேண்டும்?

Contributors
author image

Editorial Team

-முஹம்மட் தம்பி முஹம்மட் றிம்ஸான்-

பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவிருக்கின்ற பாதீடானது மக்களுக்கு அதிக சுமையினை வழங்க கூடிய பாதீடாக காணப்படுகின்றது.

இந்த நாட்டில் இது வரை 15% மாகவிருந்து வந்த VAT வரியானது இப்போது 18% மாக மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூல் இந்நாட்டில் வாழ்கின்ற மக்கள் ஒவ்வொருவெரும் வாழ்க்கைச் செலவு பிரச்சனையை இன்னும் அதிகமாக எதிர்கொள்வதற்கு தயாராக வேண்டிய சூழ்நிலையையே இந்த பாதீடு ஏற்படுத்துமென்தில் எந்த மாற்றுக் கருத்துக்களுக்குமிடமில்லை.

அதே போல கொண்டுவரப்படவுள்ள பாதீட்டின் மூலம் இந்த நாட்டில் புதிய அபிவிருத்தி திட்டங்களோ அல்ல புதிய கட்டட நிர்மானங்களுக்கோ இடமளிக்கப்படவில்லை ஆனால் ஒரே ஒரு விடையம் மாத்திரம் உள்வாங்கப்பட்டிருக்கின்றது. அதாவது வீதி அபிவிருத்தியை மாத்திரமே முதன்மைப்படுத்தி இப்பாதீட்டில் உள்வாங்கப்பட்டிருக்கின்றது. (இதுவே கெளரவ முஷர்ரப் அவர்கள் ஆதரிப்பதற்கான முதன்மை காரனி எனலாம்)

உண்மையிலே இந்த பாதீட்டை பொருத்த மட்டில் இலங்கையில் வாழ்கின்ற சாதாரன மக்களுக்கு தற்போதுள்ளதை விட மிகவும் அதிகமாக வாழ்க்கைச் சுமையினை சந்திக்க நேரிடும் என்பதை பொருலியல் நிபுணர்கள் உள்ளடங்களாக ஏனைய துறை சார்ந்த நிபுணர்கள் தங்கள் கணிப்பினை வெளியிட்டிருக்கின்ற வேளையில் சாதாரன மக்களுக்கு மிகவும் விமோசனமான பாதீடு என்பதாக கெளரவ முஷர்ரப் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்.

அந்த பாதீடு எவ்வாறான விமோசனத்த மக்களுக்கு வழங்கப் போகிறது என்பதை இது வரை அவரோ அல்லது அவரது கைக்கூலிகளோ எந்தவொரு வகையிலும் தெளிவு படுத்தாத இச்சந்தர்ப்பத்தில் மக்களை மடையர்களாக்க கைகூலிகளை வைத்துக் கொண்டு உப்புச்சப்பில்லாத கானொளிகளை வெளியிடுவது அரசியலின் இறுதி கட்டத்திற்கே அவரை அழைத்து செல்லும் என்பதை மறுக்க முடியாது.

அதே போல அப்பாதீட்டை ஆதரிப்பற்கான இரண்டாவது காரனமாக அவர் குறிப்பிடுவது மக்களின் அபிவிருத்தி சார்ந்த பிரச்சனைகளை தீர்பதாக தெரிவிக்கின்றார். ஆனால் இந்த பாதீட்டை பொருத்த வரையில் ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்ககுமாக பொத்துவில் தொகுதி உள்ளடங்களாக 400 மில்லியன் ரூபாய் ஒடுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.

ஆனால் இந்த 400 மில்லியன் ரூபாவையும் வீதி அபிவிருத்தி தவிர்ந்த எந்தவொரு நடவடிக்கைக்கும் பயன்படுத்த முடியாதென பாதீட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்ற பொழுது மக்களின் பிரச்சனையை தீர்ப்பதாக வெரும் பசப்பு வார்த்தைகளை பயன்டுத்தி மக்களை இன்னும் மமடையர்களாக்க முற்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த இடத்தில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். அதாவது இந்த பாதீட்டை ஆதரித்து பொத்துவிலிலுள்ள ஹெடஓயா மற்றும் கானிப்பிரச்சனைகளை தான் தீர்க்கப்போவதாக கூறிவிட்டு தன்னுடைய கைக்கூலிகளுக்கு வீதி கொந்தராத்துகளை வழங்கி அதனூடாக கொமிசன்களை பெற்றுக் கொண்டு தன்னையும் தனது சகாக்களையும் வளர்த்துக் கொள்ளவே முயற்சிக்கின்றார் என்பதை தெளிவாக உணர முடிகிறது.

அதற்காகவே ஒருசில நபர்களை வைத்து வீதிதொப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கா பாதீட்டிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதான அவரது தயாரிப்பில் கானொளிகள் வெளியிடப்பட்டிருக்கின்றது.

கெளரவ நிதியமைச்சரின் பஜ்ஜட் வாசிப்பின் போது பொத்துவிலை மையப்பட்டுத்தியோ கெளரவ முசரப்பை குறிப்பிட்டோ எந்தவொரு விஷேடமான ஒதுக்கீடுகளை அவர் அங்கு குறிப்பிடவில்லை. ஆகவே ஏனைய தொகுதிகளைப் போன்றே பொத்திவில் தொகுதிக்கும் வீதி அபிவிருத்திக்கு மாத்திரம் பாதீட்டில் இடமுண்டு.

அவ்வாரில்லாமல் விஷேடமாக பொத்துவிலுக்கென்ற பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை அவர் பாதீட்டினூடாக பெற்றிந்தால் அதனை முன்நிறுத்தி அவர் பாதீட்டிற்கு வாக்களித்திருக்க முடியும்.

உதாரமாக கடந்த நல்லாட்சியின் போது நிந்தவூரில் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்காக அன்றிருந்த நிதியமைச்சர் பாதீட்டு வாசிப்பின் போது குறிப்பிட்டிருந்தார். அவ்வாறாவது ஒரு விடையத்தை கூட இவரால் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

எனவே அவ்வாறு இவ்வரசாங்கத்தை ஆதரிக்க முற்படுகின்றவர் ஹெடஓயா திட்டத்திற்காக இப்பாதீட்டில் நிதியை ஒதுக்கீடு செய்துவிட்டு பொத்துவில் மக்களின் குடிநீர் மற்றும் நீர்ப்பாசன பிரச்சனைகளை தீர்ப்பதாக கூறி ஆதரவாக வாக்களித்திருக்க முடியும் அல்லது பொத்துவில் மக்கள் ஆதரவளிக்க கோரியிருக்க முடியும். ஆனால் அதனை செய்யாமல் விட்டுவிட்டு வெரும் வீதிகளுக்கான ஒதுக்கீட்டின் மூலம் கொமிசனை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்ற அவரது செயலை நியாயப்படுத்த ஒரு சில நபர்களை வைத்து கானொளிகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றும் முயற்சியிலேயே அவரது செயற்பாடுகள் காணப்படுகிறது.

இதனை மக்களுக்கு தெளிவு படுத்தாமல் ஊடகம் என்ற போர்வையில் கொரவ முஷர்ரப் அவர்களின் கைக்கூலிகளாக செயற்படுகின்றவர்கள் தயவு செய்து மக்களை மடையர்களாக்க துனைபோக வேண்டாம்.

இவரது அன்மைக்கால நடவடிக்கைகளை பார்க்கின்ற போது சமுக நலனுக்கெதிரான யதார்த்தமற்ற முன்னெடுப்புக்களையே இவர் மேற்கொண்டுவருவதை புத்திஜீவிகள் பலரும் தெளிவு படுத்தியிருக்கின்றார்கள்.

எனவே கட்சியினதும் இச்சமுகத்தினதும் தீர்மானத்திற்கு எதிராக அவர் அந்த பாதீட்டிற்கு ஆதவளிப்பதாகவிருந்தால் இக்கட்சியையும் இம்மாவட்ட மக்களையும் கட்சியின் போரிளிகளையும் அவமானப்படுத்தவே ஆதரவளிக்கின்றார் என்பதை எம் சமூகம் ஏற்றுக்கொண்டு அவருக்க தக்க பதிலடியினை எம் சமூகம் வழங்க வேண்டும்.

Web Design by Srilanka Muslims Web Team