பாரை மீன்களை கரைவலைகளுக்கு அள்ளும் மீனவர்கள்..! - Sri Lanka Muslim

பாரை மீன்களை கரைவலைகளுக்கு அள்ளும் மீனவர்கள்..!

Contributors
author image

Farook Sihan - Journalist

– பாறுக் ஷிஹான் –

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் அம்பாறை மாவட்டத்தின்  கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர்  3 வகையான  பாரிய பாரை மீன்கள் வளையா மீன்கள்  சுறா மீன்கள் என கரைவலைகள்  மூலம் பிடிக்கப்பட்டு  பல இலட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இன்றும் (23)  இவ்வாறு சாய்ந்தமருது மற்றும் கல்முனை பகுதிகளில் பாரை இன மீன்கள் அதிகளவாக கரைவலைகளுக்கு பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

குறித்த பாரை   மீன் ஒன்றின்  பெறுமதி சுமார் 1000 ரூபா முதல் 1200 வரை விற்பனையாவதுடன்   இதேவேளை இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களினால் ஒரு  மீனவரின்  நாள் வருமானமாக 4 முதல் 5 இலட்சமாகவும்  உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது கல்முனை கடற்கரையில் கரை வலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடி தூண்டில்  என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையில் கரைவலை மீனவர்களுக்கு இவ்வாறான பாரிய மீன்கள் தொகுதியாக பிடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Web Design by Srilanka Muslims Web Team