பால்மா விளம்பரங்களை ஆஸ்பத்திரிகளில் காட்சிப்படுத்த தடை - Sri Lanka Muslim

பால்மா விளம்பரங்களை ஆஸ்பத்திரிகளில் காட்சிப்படுத்த தடை

Contributors

பால்மாவை மேம்படுத்தும் எந்தவொரு விளம்பரப் பலகைகளையும் ஆஸ்பத்திரி வளவுகளில் காட்சிப்படுத்தலாகாதென சுகாதார அமைச்சு ஆஸ்பத்திரிப் பணிப்பா ளர்களுக்கு அறிவித்துள்ளது.

சில பால்மா கம்பனிகள் ஆஸ்பத்திரிகளுக்கு உதவிகளைச் செய்து விட்டு பால்மாவின் பெயரை விளம்பரப் பலகையில் காட்சிப்படுத்துகின்றன.

அதன் மூலம் பால்மாவைப் பிள்ளைகளுக்கு வழங்க பெற்றோர் நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

குழந்தை பால் உணவு, சோயா பால் பால்மா, மோல்டட் அடங்கிய பால், பாலூட்டும் போத்தல்கள், சூப்பிகள் போன்றவை ஆஸ்பத்திரி சுற்றாடலில் தடைசெய்யப்பட வேண்டுமென்றும் ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தாய்பாலைப் பெறுவது குழந்தையின் மனித உரிமையாகும்.

தெற்காசியாவில் தாய்ப்பால் வழங்கும் சிறந்த நாடாக இலங்கை சாதனை படைத்துள்ளதென்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.(thinakaran)

Web Design by Srilanka Muslims Web Team