பிக்குகள் இன்றி 400 விஹாரைகளுக்கு மூடுவிழா! - Sri Lanka Muslim

பிக்குகள் இன்றி 400 விஹாரைகளுக்கு மூடுவிழா!

Contributors

பௌத்த பிக்குகள் இன்றி வடமேல் மாகாணத்தில் மட்டும் 400 விஹாரைகள் மூடப்பட்டுள்ளன.

ரம்புக்கன திஸ்மல்பொல விஹாரையில் 3 சிறுவர்களை துறவறத்தில் இணைத்து கொண்ட போது அங்கு உரையாற்றிய தெல்தனிய ரதனசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இரண்டு கோடிக்கு மேல் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில் அதிகளவானவர்கள் பௌத்த மதத்தை பின்பற்றுகின்றனர்.

எனினும், இந்த மக்களுக்கு சேவையாற்ற 35000 பௌத்த பிக்குகளே இருக்கின்றார்கள்.

அதிகளவான விஹாரைகள் மூடப்படுவதற்கு பௌத்த பிக்குகள் போதியளவு இன்மையே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.(lwin)

Web Design by Srilanka Muslims Web Team