பின்லேடன் மறைவிட வீடு பற்றி தகவல் கொடுத்தது யார்? $25 மில்லியன் சன்மானம் யாருக்கு? (01) - Sri Lanka Muslim

பின்லேடன் மறைவிட வீடு பற்றி தகவல் கொடுத்தது யார்? $25 மில்லியன் சன்மானம் யாருக்கு? (01)

Contributors

அமெரிக்கா மிச்சிகனை சேர்ந்த ஒருவர், “பில்-லேடனின் இருப்பிடம் பற்றிய உளவுத் தகவலை முதலில் கொடுத்தது நான்தான். பின்-லேடனின் தலைக்கு கொடுப்பதாக சொல்லப்பட்ட சன்மான தொகை 25 மில்லியன் டாலரை எனக்கு தர வேண்டும்” என அமெரிக்க உளவுத்துறை எஃப்.பி.ஐ.க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இவரது இந்த உரிமை கோரலில் ஏதோ விஷயம் இருக்க வேண்டும் போலிருக்கிறது. ஏனென்றால், இவரது சார்பில் உளவுத்துறை எஃப்.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பியிருருப்பது, சிக்காகோவின் மிக பிரபல வக்கீல் நிறுவனம், The Loevy & Loevy law firm.

இந்த வக்கீல் நிறுவனம் எக்கச்சக்க பணம் வாங்கும் நிறுவனம். பெரும்பாலும் இந்த நிறுவனத்தில் டீல் எப்படியிருக்கும் என்றால், தமது வக்கீல் கட்டணத்தை, கட்சிக்காரர் பெறப்போகும் தொகையின் குறிப்பிட்ட சதவீதத்தில் ஒப்பந்தம் செய்து கொள்வார்கள்.

உதாரணமாக, இந்த பின்-லேடன் உளவுத் தகவல் வழக்கை இவர்கள் எடுத்துக் கொள்வதென்றால், 25 மில்லியன் சன்மானம் கட்சிக்காரருக்கு கிடைத்தால், அதில் 30 அல்லது 40 சதவீதம் தமக்கு என்று ஒப்பந்தம் செய்திருப்பார்கள்.

ஒருவேளை கேஸ் தோற்றுப்போய், பின்-லேடனின் தலைக்காக நிர்ணயிக்கப்பட்ட சன்மான பணம் கிடைக்காவிட்டால், வக்கீல் பீஸ் கிடையாது! தம்மால் கேஸை ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை!

அப்படிப்பட்ட வக்கீல் நிறுவனம் இந்த கேஸை எடுத்திருக்கிறது என்பதால், மீடியாக்களுக்கு இந்த விஷயத்தில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கட்சிக்காரர் ஜெயிப்பதற்கு தேவையான ஆதாரம் ஏதோ அவரிடம் உள்ளது என்பதே அதன் அர்த்தம்.

நாம் இதுவரை வெளியிட்ட ராணுவ புலனாய்வு கட்டுரைகளுக்கு வாசகர்கள் அதன் கீழுள்ள லிங்கில் சென்று விளம்பரங்களில் கிளிக் செய்து ஆதரவு தெரிவித்திருந்தார்கள். விளம்பரங்களின் வருமானத்திலேயே இந்த இணையத்தளத்தை தொடர்ந்து நடத்த முடியும். தமிழில் அதிகம் வெளியாகாத இதுபோன்ற கட்டுரைகளை தொடர்ந்து தர முடியும். இந்தக் கட்டுரைக்கும் வாசகர்கள்  ஆதரவு இருந்தால், தொடர்ந்து இதுபோன்ற கட்டுரைகளை வெளியிடலாம்.

The Loevy & Loevy வக்கீல் நிறுவனம், எஃப்.பி.ஐ. டைரக்டர் ஜேம்ஸ் கோமிக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், பின்-லேடன் பற்றிய உளவுத் தகவலுக்கு உரிமை கோரும் நபராக, 63 வயதான டாம் லீ என்பவரை குறிப்பிட்டுள்ளார்கள். டாம் லீ, 2003-ம் ஆண்டே பின்-லேடனின் இருப்பிடம் பற்றிய துல்லியமான தகவலை கொடுத்திருந்தார் என்கிறது வக்கீல் நோட்டீஸ்.

பின்-லேடனின் இருப்பிடம் பற்றி தகவல் கொடுத்ததாக சொல்லும் இந்த டாம் லீ என்பவர் யார்?

இவர் ஒரு அமெரிக்க பிரஜை. எகிப்தில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறியவர். சர்வதேச வைர வியாபாரி. வைர வியாபாரத்துக்காக பல நாடுகளுக்கும் பயணம் செய்பவர். அந்த வகையில் பல நாடுகளில் பலருடன் தொடர்பு உடையவர்.

பாகிஸ்தானில் வைர வர்த்தகம் செய்யும் குடும்பம் ஒன்றுடன் டாம் லீ பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்திருக்கிறார். இந்த பாகிஸ்தானி வைர வர்த்தக குடும்பம், அல்-காய்தாவுக்கு எதிரான கருத்து கொண்டவர்கள். அந்தக் குடும்பத்தை சேர்ந்த ஒருவர், பாகிஸ்தான் உளவுத்துறையில் அதிகாரியாக உள்ளார்.

பாக். உளவுத்துறை அதிகாரிதான் பின்-லேடன் பற்றிய தகவலை கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி, “பின்-லேடன் தற்போது பாகிஸ்தானில் அபொத்தாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் குடியிருக்கிறார். பாகிஸ்தான் உளவுத்துறைதான் அவர் அங்கே ரகசியமாக மறைந்து வாழ உதவுகிறது. பெஷாவார் பகுதியில் இருந்த பின்-லேடனை அழைத்துக்கொண்டு அபொத்தாபாத்தில் உள்ள வீடு ஒன்றில் விடுவதற்காக என்னை அனுப்பி வைத்தார்கள்.

நான்தான் பின்-லேடனுக்கு பாதுகாப்பு கொடுத்து, யாரும் அறியாமல் அவரை அழைத்துவந்து, அபொத்தாபாத்தில் விட்டேன். அந்த வீடு எனக்கு நன்றாக தெரியும்” என்று டாம் லீயிடம் கூறியுள்ளார்.

அமெரிக்கா திரும்பிய டாம் லீ, இந்த ரகசியத்தை அமெரிக்க அதிகாரிகள் யாரிடமாவது தெரிவிக்க விரும்பினார். வைர வியாபாரம் தொடர்பான விசாரணை ஒன்றில் தம்முடன் பழக்கமான கஸ்டம்ஸ் அதிகாரி ஒருவரது ஞாபகம் வந்தது. கஸ்டம் அதிகாரியை சந்தித்து இந்த விஷயத்தை சொன்னார்.

கஸ்டம்ஸ் அதிகாரி, இந்த விஷயத்தை உளவுத்துறை எஃப்.பி.ஐ.யிடம் தெரிவிக்க, அவர்கள் தமது ஏஜென்ட் ஒருவரை அனுப்பினார்கள். டாம் லீயை சந்தித்த எஃப்.பி.ஐ. ஏஜென்ட், பின்-லேடன் பற்றிய தகவலை பெற்று சென்றிருக்கிறார்.

இது 2003-ம் ஆண்டு நடந்தது.

பின்-லேடனின் இருப்பிடம் பற்றிய துல்லியமான தகவல் 2003-ம் ஆண்டு கிடைத்தும், 2011-ம் ஆண்டுதான் பாகிஸ்தானில் பின்-லேடன் இருக்கும் இடத்தை ரெயிடு செய்து, அவரைக் கொன்றது அமெரிக்க அதிரடிப்படை சீல் டீம். 2003-ம் ஆண்டு டாம் லீ குறிப்பிட்ட அதே அபொத்தாபாத் நகரில்தான், பின்-லேடன் மறைந்திருந்த வீடும் இருந்தது. (விறுவிறுப்பு)

Web Design by Srilanka Muslims Web Team