கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா - Sri Lanka Muslim

கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா

Contributors

(எமது அரசியல் நிரூபர்)

கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான தனது கடிதத்தினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் சற்று முன்னர் கையளித்துள்ளார்.

இராஜினாமா தொடர்பில் எமது இணைய செய்தியாளர்  சிறாஸ் மீராசாஹிபிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் தன் இராஜினாமாவை உறுதிப்படுத்தினார்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்  றவூப் ஹகீமின் வீட்டில் வைத்தே இராஜினாமா கடிதத்தை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹகீமை தொடர்வு கொண்ட போது சிறாஸ் மீராசாஹிப் தனது இராஜிநாமா கடிதத்தை வழங்கியுள்ளதாகவும் எஞ்சிய காலப்பகுதிக்கு சட்டத்தரணி நிசாம் காரியப்பரை கட்சி நியமிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நவம்பர் முதலாம் திகதியிலிருந்து கல்முனை மேயராக சிறாஸ் மீராசாஹிப் செயற்பட முடியாது எனவும் மேயர் பதவியை இராஜினாமா செய்யுமாறும் கட்சியின் தலைவர் மேயர் சிராஸ் மீராசாஹிப்புக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Web Design by Srilanka Muslims Web Team