பிரதமரின் விஜயத்தின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு நீதி கோரி இத்தாலியில் ஆர்ப்பாட்டம்..! - Sri Lanka Muslim

பிரதமரின் விஜயத்தின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு நீதி கோரி இத்தாலியில் ஆர்ப்பாட்டம்..!

Contributors

இத்தாலிக்கு பிரதமர் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இத்தாலியில் உள்ள இலங்கையர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும். முன்னாள் சட்டமா அதிபரை கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுப்பதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு நீதி கோரி இத்தாலியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் கத்தோலிக்க மத குருமாரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர் என திருச்சபை தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team