பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள மாட்டேன்: சபாநாயகர் » Sri Lanka Muslim

பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள மாட்டேன்: சபாநாயகர்

Contributors

அடுத்த பிரதமராக தனது பெயர் முன்மொழியப்பட்டால் தான் அதனை நிராகரிக்க போவதாக சபாநாயகர் ஷமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்பொழுது நான் வகித்து வரும் சபாநாயகர் பதவி எனக்கு போதுமானது. பிரதமர் பதவியை நான் விரும்பவில்லை.

தேர்தலில் போட்டியிட்டு பதவிகளுக்கு தெரிவுசெய்யப்பட வேண்டுமேயன்றி, நியமனங்கள் வழியாக பதவிகளை பெறுவது பெருத்தமற்றது.

மக்களுடன் நெருக்கமான வேலை செய்யக் கூடிய சாதாரண நாடாளுமன்ற பதவியில் பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்தால் அதனை நான் பெரிதும் விரும்புவேன் என்றார்.lw

Web Design by The Design Lanka