பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் - மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்..! - Sri Lanka Muslim

பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் – மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்..!

Contributors

பிரதமர் பதவி தொடர்பில் தாம் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இன்று காலை பிரதமர் தனது நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் நியூஸ்வயருக்குத் தெரிவித்தார்.

சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இராஜினாமா செய்யுமாறு கோரிய மகாநாயக்க தேரர்களின் பிரேரணையை உடனடியாக அமுல்படுத்துமாறு பௌத்த பிக்குகள் குழு நேற்று ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அனைத்துக் கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் தயாராக அறிவித்துள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team