பிரதமர் பிக்குகளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் - சீலரட்ன தேரர் - Sri Lanka Muslim

பிரதமர் பிக்குகளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் – சீலரட்ன தேரர்

Contributors

பிரதமர் டி.எம். ஜயரட்ன பௌத்த பிக்குகளை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள ஜனசெத்த முன்னணியின் தலைவர் பத்தரமுல்ல சீலரட்ன தேரர்  அவர் பௌத்த பிக்குகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

பிரதமரை மன்னிப்பு கோருமாறு வலியுறுத்துமாறு அஸ்கிரி பீடாதிபதியிடம், சீலரட்ன தேரர் மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

சில பௌத்த பிக்குகள் தம்மை போதைப் பொருள் கடத்தல்காரனாக சித்தரிக்க முயற்சிப்பதாக பிரதமர் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான பௌத்த பிக்குகளுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பிரதமர் என்ற ரீதியிலும் பௌத்த சாசன அமைச்சர் என்ற ரீதியிலும் பிரதமர் டி.எம் ஜயரட்னவிற்கு காணப்படுவதாக சீலரட்ன தேரர் தெரிவித்துள்ளார்.

பௌத்த பிக்குகளே இந்த நாட்டை பாதுகாத்து வந்ததாகவும், நாட்டைப் பாதுகாக்க வேண்டியது பௌத்த பிக்குகளின் கடமையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பௌத்த பிக்குகளுக்கு எதிராக பிரதமர் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் அதற்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டம் நடத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.(v)

 

 

Web Design by Srilanka Muslims Web Team