பிரதமர் மஹிந்த உட்பட பலருக்கு எதிராக Maina Go Gama ஆர்ப்பாட்டக்கார்கள் நீதிமன்றில் மனுத் தாக்கல்! - Sri Lanka Muslim

பிரதமர் மஹிந்த உட்பட பலருக்கு எதிராக Maina Go Gama ஆர்ப்பாட்டக்கார்கள் நீதிமன்றில் மனுத் தாக்கல்!

Contributors

கொழும்பு, கொள்ளுப்பிட்டி அலரி மாளிகை அருகே மைனா கோ கம என ஸ்தாபிக்கப்பட்டுள்ள இடத்தில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருபவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்தி தடைகளை ஏற்படுத்தியுள்ளமை உட்படலான பல இடையூறுகளுக்கு எதிராக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ உட்படலாக பலருக்கு எதிராக நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் பத்தரமுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருமே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு எதிரான இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team