பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷவை அழகிய நீர்விழ்ச்சி என வர்ணித்த அமைச்சர் - Sri Lanka Muslim

பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷவை அழகிய நீர்விழ்ச்சி என வர்ணித்த அமைச்சர்

Contributors

பிரதி அமைச்சர் நிரூ­பமா ராஜ­பக்ஷ அழ­கிய நீர்­வீழ்ச்­சியைப் போன்­றவர் என அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா நேற்று சபையில் வர்­ணித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்சின் குழு விவா­தத்தில் உரை­யாற்றும் போதே சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா இதனைத் தெரி­வித்தார்.
சபையில் மேலும் உரை­யாற்­றிய அமைச்சர்,
நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன தனது கட­மை­களை சிறந்த முறையில் மேற்­கொண்டு வரு­கிறார்.
சுத்­த­மான குடி­நீரைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான அனைத்துத் திட்­டங்­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கிறார் எனப் பாராட்­டினார்.
இதன்­போது குறுக்­கிட்ட ஐ.தே.கட்சி எம்.பி. பி.ஹரிசன், குறித்த அமைச்சர் நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்­சரை மட்­டுமே வர்­ணிக்­கின்றார். அவ்­வ­மைச்சின் பிர­தி­ய­மைச்சர் தொடர்­பாக எத­னையும் கூற­வில்லை. இதற்குப் பதி­ல­ளித்த அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா.
பிர­தி­ய­மைச்­சரை பற்றிச் சொல்­வ­தற்கு எதுவும் இல்லை. ஏனென்றால், யுத்­தத்தை முடித்து நாட்­டுக்கு சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொ­டுத்த பெரு­மைக்­கு­ரிய குடும்­பத்தைச் சேர்ந்­தவர் என்றார்.(virakesari)

Web Design by Srilanka Muslims Web Team