பிரதி அமைச்சர்கள், அமைச்சர்களுக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு » Sri Lanka Muslim

பிரதி அமைச்சர்கள், அமைச்சர்களுக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு

Contributors

பிரதி அமைச்சர்கள் அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர். அமைச்சுப் பொறுப்புக்கள் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் முறைப்பாடு செய்பய்பட்டுள்ளது.

அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் போது பிரதி அமைச்சர்களின் கருத்துக்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு பிரதி அமைச்சர்களின் பரிந்துரைகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சில அமைச்சர்கள் தங்களுக்கு எவ்வித பொறுப்புக்களையும் வழங்கவில்லை என பிரதி அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

Web Design by The Design Lanka