பிரபாகரன் நாட்டில் சகோதரர்களாக வாழ்ந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை கொலை செய்தார்.-மொஹமட் முஸாமில் - Sri Lanka Muslim

பிரபாகரன் நாட்டில் சகோதரர்களாக வாழ்ந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை கொலை செய்தார்.-மொஹமட் முஸாமில்

Contributors

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களை அவர்களின் காணிகளில் கூடிய விரைவில் குடியேற்ற அரசாங்கமும், ஜனாதிபதியும், வடக்கு மாகாண சபையும் தலையிடும் என எதிர்பார்ப்பதாக முஸ்லிம் சகோதரத்துவத்திற்கான அமைப்பின் ஏற்பாட்டாளர் மொஹமட் முஸ்ஸாமில் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட இந்த மாதம் 30 ஆம் திகதியுடன் 23 வருடங்கள் பூர்த்தியாக உள்ளது.

500 ரூபாவை மட்டும் கையில் எடுத்து கொண்டு வடக்கில் இருந்து தென் பகுதிக்கு வந்த முஸ்லிம் மக்கள் கடும் துயரங்களை அனுபவித்து வந்தனர்.

தற்பொழுது போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஜனநாயகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களை மீள குடியேறவாறுமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும் உரிய காலத்தில் முஸ்லிம் மக்களை வடக்கில் குடியேற்ற வேண்டும் என அவர்கள் அறிவிக்க வேண்டும். முஸ்லிம் மக்கள் வரலாற்றை மறந்து விடவில்லை. வாய்மொழி மூலம் கூறிய வார்த்தைக்காக முஸ்லிம் மக்கள் அங்கு செல்ல தயாராக இல்லை.

ஹஜ் யாத்திரை சென்று விட்டு பஸ்ஸில் சென்ற முஸ்லிம் மக்கள் கொலை செய்யப்பட்டனர். காத்தான்குடி பள்ளிவாசலில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டனர்.

விக்னேஸ்வரன் பிரபாகரனை கெப்படிபொலவுக்கு நிகரானவர் என்று கூறியுள்ளார். கெப்பிட்டிபொலவுடன் பிரபாகரனை ஒப்பிடும் தலைவர்கள் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

கொப்பிட்டிபொல நாட்டில் மக்களை கொலை செய்தவர் அல்ல. அவர் நாட்டில் பாதிப்புகளை ஏற்படுத்திய வெள்ளையர்களை கொலை செய்தார். எனினும் பிரபாகரன் நாட்டில் சகோதரர்களாக வாழ்ந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை கொலை செய்தார்.

63 ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தற்பொழுது 20 ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளது. வடக்கில் இருந்து வெளியேற்பட்ட மக்கள் குறித்து கணக்கெடுப்பு அவசியம் என்றார்.lw

Web Design by Srilanka Muslims Web Team