பிராந்திய மக்கள் புத்திசாலிகள் - இன்னும் மூன்று நாட்களில் 2ம் கட்ட தடுப்பூசிகளை கொண்டு வந்து சேர்ப்போம். டாக்டர் ஜி சுகுணன் பெருமிதம்…! - Sri Lanka Muslim

பிராந்திய மக்கள் புத்திசாலிகள் – இன்னும் மூன்று நாட்களில் 2ம் கட்ட தடுப்பூசிகளை கொண்டு வந்து சேர்ப்போம். டாக்டர் ஜி சுகுணன் பெருமிதம்…!

Contributors

சிலர் கூறினார்கள் கல்முனைப் பிராந்தியத்தில் பொதுமக்கள் கொவிட் 19 இற்கான சினோபார்ம் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள வரமாட்டார்கள் என்று. ஆனால் நேற்று மதியம் 12 மணியளவில் எமக்குக் கிடைத்த 50 ஆயிரம் தடுப்பூசிகளில் 45 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு ஏனைய மக்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

பொதுமக்களுக்கு இந்தளவு ஆர்வம் ஏற்பட்டிருப்பது என்னைப் பொறுத்தவரையில் இமாலய சாதனைதான்.

சாதனையை ஏற்படுத்திய எனது பிராந்திய சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் ஏனைய துறையினர் அனைவருக்கும் சிரம் தாழ்த்திய நன்றிகள்.
எமது பிராந்திய பொதுமக்கள் புத்திசாலிகள்.

ஏனையவர்களுக்கான தடுப்பூசிகளை மூன்று நாட்களில் கொண்டு வந்து சேர்ப்போம். அதுவரை பொறுமையாக இருக்குமாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுனன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 21,158 என்ற நேற்றைய பதிவு மீண்டும் இன்று 24,560 பேருக்கு வழங்கியதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team