பிரிட்டன் நதியில் மிதந்துவந்த 60 ஆயிரம் பவுண்கள்: உரிமையாளரை தேடுகிறது போலீஸ்! - Sri Lanka Muslim

பிரிட்டன் நதியில் மிதந்துவந்த 60 ஆயிரம் பவுண்கள்: உரிமையாளரை தேடுகிறது போலீஸ்!

Contributors

பிரிட்டனின் வடக்கு பகுதியில் உள்ள ஸ்பால்டிங் நகரை சேர்ந்த ஒருவர் வழக்கமாக தனது நாய்களுடன் காலையில் நடைபயணம் மேற்கொண்டு வருவது வழக்கம். அவர், சமீபத்தில் அப்பகுதி ஆற்றின் கரை வழியாக நடந்து சென்றபோது நதிக்கரையின் ஓரமாக நதியில் பிரிட்டன் பணமான பவுண்டு நோட்டுகள் நிறைய மிதந்து வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

 

உடனே அவர் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார். உடனே அப்பகுதிக்கு வந்த அதிகாரிகள், மிதந்து வந்துகொண்டிருந்த அந்த பவுண்டுகளை எல்லாம் சேகரித்தனர். இவைகள் 60 ஆயிரம் பவுண்டுகள்  என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் இந்திய மதிப்பு சுமார் 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். 

நீரில் மிதந்து வந்ததால் அந்த நோட்டுகள் சேதமடைந்துள்ளன. ஆனால், இவை அனைத்தும் வங்கியின் பவுண்டுகள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அரிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த வங்கி பணத்தை சட்டப்பூர்வ உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஸ்பால்டிங் சி.ஐ.டி. பிரிவு அதிகாரி தெரிவித்தார்.

இதுகுறித்த கைரேகை நிபுணர்களின் பரிசோதனைகளுக்கு பிறகு, உரியவரிடம் ஒப்படைக்கும்வரை இந்த பணம் போலீஸ் வசம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team