பிரித்தானிய பிரஜையின் கொலை வழக்கில் ஸ்கைப் தொழில்நுட்பம் - Sri Lanka Muslim

பிரித்தானிய பிரஜையின் கொலை வழக்கில் ஸ்கைப் தொழில்நுட்பம்

Contributors

2010 இல் தங்காலையில் கொலை செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை குரம் ஷேக்கின் விசாரணையின் போது ஸ்கைப் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், நீதிமன்றம் கோருமானால் ஏனைய நவீன தொழில்நுட்பங்களையும் குறித்த வழக்கு விசாரணையின் போது ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளதாக நீதியமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமது அமைச்சு நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள நீதிமன்றங்களிலும் ஒலிப்பதிவு மற்றும் ஏனைய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை தங்காலையில் கொலை செய்யப்பட்ட பிரித்தானியா பிரஜையுடன் இருந்த ரஷ்ய பெண்ணை வீடியோ தொலைபேசி மூலம் சாட்சியமளிக்க வைக்க கொழும்பு மேல்நீதிமன்றம் ஆலோசித்து வருவதாக மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நீதிமன்ற கூண்டுக்குள் இருந்து தரப்படும் சாட்சிக்கும் ஸ்கைப் மூலம் பெறப்படும் சாட்சிக்கும் இடையில் சூழ்நிலைக்காரணமாக முரண்பாடுகள் ஏற்படலாம் என்று சட்டவல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.tc

Web Design by Srilanka Muslims Web Team