பிலிப்பைன்ஸ்சை தாக்கிய ஹையான் புயலில் சிக்கி 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலி? - Sri Lanka Muslim

பிலிப்பைன்ஸ்சை தாக்கிய ஹையான் புயலில் சிக்கி 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலி?

Contributors

பிலிப்பைன்ஸ் நாட்டை கடந்த 8ஆம் திகதி சுமார் 315 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்றுடன் 10 மீட்டர் அளவிற்கு எழுந்த சுனாமி போன்ற கடல் அலைகள் தாக்கிய பயங்கர ஹையான் புயலில் சிக்கி சுமார் 12 ஆயிரம் பேர் வரை பலியாகியிருக்கலாமென அஞ்சப்படுகிறது.

புயல் தாக்கிய பின்னர் பிலிப்பைன்ஸ் அரசு இதுவரை 1500 மரணச்சம்பவங்களை உறுதி செய்திருந்தது இதே சமயம் மேலும் புயலில் சிக்கி 10 ஆயிரத்து 500 பேர் வரை பலியாகி இருக்கலாமென அஞ்சப்படுவதாக பிராந்திய பொலிஸ் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருப்பதனால் மீட்புக் குழுவினர் பாதிப்படைந்த இடங்களுக்கு செல்லமுடியாமல் சிரமங்களை சந்தித்துள்ளதால் பலர் உயிரிக்கும் போராடிக்கொண்டிருக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது.

எனினும் சுமார் 10லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கே சுத்தமான நீர் , மின்சாரம், போதிய உணவு இல்லாமல் மக்கள் அவதியுற்றுள்ளனர் இது மட்டுமல்லாமல் வரலாற்றிலேயே பிலிப்பைன்ஸ் சந்தித்திருக்கும் மிக மோசமான புயல் இதுவென கூறப்படுகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய ஹையான் புயல் தற்போது தென்சீனக்கடல் வழியாக வியட்நாமை நோக்கி செல்வதாகவும் தொடர்ந்து சீனாவை தாக்கப்போவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது இதனால் சீனா ஆரஞ்சு நிற எச்சரிக்கையை வெளியிட்டிருப்பதாக தெரிகிறது.

Web Design by Srilanka Muslims Web Team