பிளெக்பெரியின் பெரும்புள்ளிகள் இராஜினாமா - Sri Lanka Muslim

பிளெக்பெரியின் பெரும்புள்ளிகள் இராஜினாமா

Contributors

பிளெக்பெரி நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரியும் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரியும் அந்நிறுவனத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதேநேரம் பிரதம கணக்காளரும் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பிளெக்பெரி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய கிறிஸ்டியன் டீர், பிரேங்க் போல்டன், பிரயன் பிதுல்கா ஆகியோரே தமது பதவி விலகல் கடிதத்தினை சமர்ப்பித்துள்ளனர்.
முகாமைத்துவத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே இவர்கள் அந் நிறுவனத்திலிருந்து விலகுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிளெக்பெரி நிறுவனத்தின் சார்பில் செப்டம்பர் மாதம் வெளியான உற்பத்திகள் சந்தையில் வரவேற்பை பெறவில்லை. இதனால் அந்நிறுவனத்துக்கு பரியளவு நட்டம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பணியாற்றும் 4 ஆயிரத்து 500 பேரை தொழிலில் இருந்து இடை நிறுத்துவதாக பிளெக்பெரி அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team